கடந்த வாரம் முழுக்க நடிகர் விஜய் தொடர்பான செய்திகள் தான் இணையத்தில் டிரெண்டிங் ஆக இருந்தன. நடிகர் விஜய் ‘பிகில்’ படத்தில் வாங்கிய சம்பளம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்திற்கே சென்று விசாரணைக்கு அழைத்துச் சென்றது. பனையூரில் அவரது வீட்டில் வைத்து இரண்டு நாட்கள் விசாரணை செய்தது, விசாரணை முடிந்து படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ளச் சென்ற போது, பாரதீய ஜனதாக் கட்சியினர் போராட்டம் நடத்தியது, அங்கு திரண்ட விஜய் ரசிகர்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் வழுக்க,
போயி வேற வேலை இருந்தா பாருங்கடா… pic.twitter.com/6tcwhsFxgT
— VijaySethupathi (@VijaySethuOffl) February 12, 2020
போலீஸ் தடியடி நடத்தியது, விஜய் ரசிகர்களுடன் வேன் மீது ஏறி செல்ஃபி எடுத்தது, இரண்டாம் நாள் மீண்டும் வேன் மீது ஏறி ரசிகர்களிடம் தலை வணங்கியது..” என பரபரப்புக்கு பஞ்சமின்றி சென்றது. தற்போது விஜய் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு தொடர்பாக சில வதந்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. கட்டாய மதமாற்றம் செய்வதற்காக வாங்கிக் பதுக்கிய பணத்தைக் கைப்பற்றத் தான் அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது என்ற புரளிகள் இணையத்தில் பரவ; இவை அனைத்தினையும் தொகுத்து அதற்கு கீழே நடிகர் விஜய் சேதுபதி, “போயி வேற வேல இருந்தா அதப் பாருங்கடா” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.