Tamil Movie Ads News and Videos Portal

பல விதங்களில் படம் எடுக்கும் விக்ரம்

‘டிமாண்டி காலனி’ ‘இமைக்கா நொடிகள்’ ஆகியப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது விக்ரம் நடித்து வரும் திரைப்படம் “கோப்ரா”. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் பல வித கெட்டப்புகளில் இருக்கும் பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. சில புகைப்படங்களைப் பார்க்கும் போது, அது நடிகர் விக்ரம் தானா..?

என்கின்ற கேள்வி எழும் அளவிற்கு அந்த மேக்கப் தத்ரூபமாக அமைந்திருக்கிறது. இதற்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘அந்நியன்’ படத்தில் மூன்றுவித கெட்டப்புகளில் தோன்றியிருந்தார் விக்ரம். கோப்ராவில் அவரின் கெட்டப்பும் நடிப்பும் மற்ற படங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும் அளவிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.