விருதுகளைக் குவிக்கும் மதுமிதாவின் “கே.டி.கருப்பு”
நாக் விஷால், மு.ராமசாமி நடிப்பில் மதுமிதா இயக்கத்தில் யூட்லி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கே.டி.என்ற கருப்புதுரை”. இப்படத்தில் முதியவர் ஒருவருக்கும் ஒரு சிறுவனுக்குமான அன்யோன்யமான வாழ்வியல் கதையாக கூறப்பட்டிருக்கிறது. பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறது. இப்படம் குறித்து இப்படத்தில் நடித்துள்ள மு.இராமசாமி கூறும் போது, ‘வயோதிக பெற்றோர்களை கவனிக்க மனமின்றி சில பிள்ளைகளே கொல்லும் முறைதான் தலைக்கூத்தல் என்று அழைக்கப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.