சென்ற ஆண்டு மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றத் திரைப்படம் “கும்பளாங்கி நைட்ஸ்”. சகோதரர்களின் பாசத்தைப் பற்றிப் பேசிய இப்படத்தில் சோனு நிகம், பகத் பாசில், சவுபின் சாஹிர், சுசிலா மற்றும் பலர் நடித்திருந்தனர். ‘சால்ட் அண்ட் பெப்பர்’, மகேஷிண்டே பிரதிகாரம், மாயநதி, ஐந்து சுந்தரிகள், இடுக்கி கோல்ட், இயோபிண்டே புஸ்தகம் போன்ற வெற்றி பெற்ற படங்களின் திரைக்கதையாசிரியரான ஷ்யாம் புஷ்கரன் இதற்கும்
கதையெழுதியதோடு பகத் பாசில் மற்றும் இயக்குநர் திலேஷ் போத்தனோடு இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தார். தற்போது இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக தெரிகிறது. தமிழில் ரீமேக் உரிமையை வைத்திருக்கும் ஈகிள் ஐ புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. கதிர் நாயகனாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தெரியவில்லை.