சமூக அக்கறையோடு திரைப்படம் இயக்கும் இயக்குநர்களின் வரிசையில் இயக்குநர் ஜனநாதனும் முக்கியமானவர். அவரின் படங்களில் ‘இயற்கை’ படத்தை தவிர்த்து மற்ற படங்களான ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ போன்ற படங்கள் சமூகங்களில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளின் பின்னால் இருக்கும் அரசியலைப் பேசியது. அந்த வரிசையில் தற்போது
இவர் இயக்கி வரும் “லாபம்” திரைப்படம் ‘விவசாயம்’ மற்றும் அதனோடு தொடர்புடைய உணவு அரசியல் இவற்றை ஆழமாகப் பேசவிருக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. போஸ்டரில் சமூக ஆர்வலர் போன்ற விஜய் சேதுபதியின் தோற்றமும், விவசாய போராட்டம் நடத்தும் மக்களின் மீதான போலீஸ் துப்பாக்கிச்சூடும் இந்தப் போஸ்டரின் சிறப்பாக அமைந்துள்ளது.