விடிவி கணேஷ் தயாரிப்பில் வி.இசட் துரை இயக்கத்தில் சுந்தர்.சி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் இருட்டு. வரும் டிசம்பர் 11ல் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இதில் நாயகியாக தெலுங்கில் நடித்து வரும் சாக்ஷி செளத்ரி நடித்துள்ளார். சாய் தன்ஷிகா, விமலா ராமன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தில் முஸ்லீம் மதத்தின் “ஜின்” தொடர்பான பேய்க்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நாயகி சாக்ஷி செளத்ரி இதற்கு முன்னர் தமிழில் ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தில் நடித்திருக்கிறார். டிரைலரைப் பார்க்கும் போதே இவர் படத்தில் மிகவும் செக்ஸியாக நடித்திருப்பது தெரிகிறது. சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தமிழில் கண்டிப்பாக நான் ஒரு ரவுண்டு வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் எந்த நடிகருடன் லிஃப் லாக் காட்சியில் நடிக்க ஆசை என்று கேட்ட கேள்விக்கு “நடிகர் விஜய்” என்று பதிலளித்துள்ளார்.