ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். இவர் அதற்குப் பின்னர் சமுத்திரக்கனி நடிப்பில் தாமிரா இயக்கத்தில் வெளியான ‘ஆண் தேவதை’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தொடர்ச்சியாக வாய்ப்புகள் வராததால், சமீபத்தில் அவர் ஒரு போட்டோ ஷூட் நடத்தினார். அதில் இடுப்பு மடிப்பு தெரியும்படி அவர் அணிந்திருந்த சேலை புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது. பல இளைஞர்கள் இணையத்தில் அப்புகைப்படத்தை தேடத் தொடங்கினார்கள். இருப்பினும் கூட அது அவருக்கு புதிய பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரவில்லை. இந்நிலையில் அதே புகைப்படங்களை சிலர் கைப்பற்றி அதை மிகவும் கீழ்மைப்படுத்தி ஆபாசத் திரைப்படமாக மாற்றி, அதை ரம்யா பாண்டியன் பெயரில் போலி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை துவக்கி அதில் பதிவேற்றம் செய்துவிட்டனர். இதை அறிந்து கலங்கிப் போன ரம்யா பாண்டியன், அந்த கணக்கு தன்னுடையது இல்லை. மேலும் அப்புகைப்படம் மற்றும் அந்தப் போலிக்கணக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் தான் முறையிட இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார்.