சென்ற ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்தனைக்கும் படத்தில் கதாநாயகி இல்லை, பாடல்கள் இல்லை; வழக்கமான சினிமாத்தனங்கள் பெரும்பாலானவை இல்லாத படமாக இருந்தாலும், அப்படத்தின் கதை மற்றும் திரைக்கதைக்காக அப்படம் பெரும் வெற்றி பெற்றது.
அப்பொழுதே இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறோம் என்று அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவே ஹிந்தியிலும் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கிறார். ஹிந்தியிலும் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இத்தகவலை அஜய் தேவ்கன் உறுதிபடுத்தி இருக்கிறார். அவர், “கைதி ஹிந்தி ரீமேக்கில் நடிக்கிறேன். இப்படம் பிப்ரவரி 12 2021ல் வெளியாகும்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.