டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் வரும் 9-ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் அந்தகன். இப்படம் பலமொழிகளில் வெளியாகி இருந்தாலும் தற்போது பிரசாந்த் நடிப்பில் அந்தகனை காண அனைவரும் ஆவலோடு இருக்கிறார்கள். நண்பர்கள் தினமான இன்று இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. பிரஸ்மீட்டில் பிரசாந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், பிரியா ஆனந்த், தியாகராஜன் உள்பட படக்குழு அனைவரும் கலந்துகொண்டனர். அனைவரின் பேச்சும் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியது. பிரஸ்மீட்டில் நிறைவாக
நடிகர் பிரசாந்த் பேசும்போது,
“அந்தகன் அருமையான படம். படத்தில் நிறைய ஸ்டார்ஸ் இருக்காங்க. சமுத்திரக்கனியை அய்யான்னு தான் அழைப்பேன். அவரை அப்பா அழைத்ததும் நடிக்க வந்தார். நடிப்பு மீது நல்ல பேஷன் உள்ளவர் அவர். சிம்ரனும் நானும் ஏழு படங்கள் நடித்துள்ளோம். அவர் என் நண்பி. பிரியா ஆனந்த் ரொம்ப எனர்ஜியானவர். வனிதா விஜயகுமார் படத்தின் எல்லா புரோமோசனுக்கும் சப்போர்ட் செய்தார். ஒளிப்பதிவாளர் ரவி சார் எதுவுமே தெரியாதவர் போல் இருப்பார். எல்லோரையும் அழகாக காட்டியுள்ளார். யோகிபாபு சார், மனோபாலா சார், பூவையார் என எல்லோரும் படத்திற்கு பேருதவி செய்தனர். நடிகர் கார்த்திக் சார் லோகேசன் வந்ததும் பெரிய வைப் கிடைக்கும். என் இயக்குநர் என் அப்பா. அவரின் நட்பு கிடைத்தது என் வரம். ” என்றார். பிரசாந்த் முகத்தில் ஏகத்திற்கும் பாசிட்டிவிட்டி தெரிந்தது. அந்தகன் வெல்லட்டும்