Tamil Movie Ads News and Videos Portal

இயக்குநர் விஜய், கெளதம் மேனன் ஆகியோருக்கு கோர்ட் உத்தரவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் கெளதம் மேனன் ‘குயின்’ என்ற பெயரில் ரம்யாகிருஷ்ணனைக் கொண்டு வெஃப்சீரிஸாகவும், இயக்குநர் விஜய் கங்கணா ரனாவத் நடிப்பில் திரைப்படமாகவும் எடுக்க முயற்சித்து வருகிறார்கள். இவர்கள் தவிர்த்து இயக்குநர் பிரியதர்ஷிணியும் ‘தலைவி’ என்ற பெயரில் இப்படத்தை எடுக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, “மறைந்த முன்னாள் முதல்வர் தொடர்பாக எடுக்கப்படும் படங்கள் கண்ணியம் குறையாத வகையில் எடுக்கப்படவிருக்கிறதா..? என்று சரி பார்க்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு கொடுத்தார். இந்த மனு மீதான விசாரணையில் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.