மும்பையை சேர்ந்த நடிகையான சிருஷ்டி டாங்கே தமிழ்த் திரைப்படங்களில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இன்னும் அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை. விஜய் சேதுபதி தமன்னா நடிப்பில் வெளியாகியிருந்த ‘தர்மதுரை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இருப்பினும் தனக்கான சவாலான கதாபாத்திரம் இன்னும் அமையவில்லை என்று எண்ணி வருபவர்,
தற்போது பாபுகணேஷ் நாயகனாக நடித்து இயக்கி வரும் “கட்டில்: திரைப்படம் தனது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறார். இப்படத்தில் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்த பையனின் துருதுரு நடவடிக்கைகளை பார்த்து ரசித்த அவர், அச்சிறுவன் தான் பாபுகணேஷின் மகள் என்பதை அறிந்து வியந்து போனார். பார்ப்பதற்கு அச்சு அசப்பில் பையன் போலயே அவனை மாற்றி இருந்தார்கள். அதைப் பார்த்து தான் ஏமாந்து போனதை எண்ணி சிரித்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே.