தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் தற்போது வெகு சில படங்களிலேயே நாயகியாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் 85 வயது பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருவதோடு, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் துல்கர் சல்மான் தமிழில் ஹீரோவாக நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார் காஜல். இப்படம் தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெளியாகவிருப்பதால் முதன்முறையாக மலையாளத் திரையுலகில் கால் பதிக்கவிருக்கிறார் காஜல்.