1990 மற்றும் 2000 காலகட்டங்களில் தமிழில் உச்சப்பட்ச நாயகியாக விளங்கியவர் நடிகை குஷ்பு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகள் பலவற்றிலும் கோலோச்சியவர். பின்னர் 2000ம் ஆண்டில் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் திருமணம் செய்து கொண்டு நடிப்பதில் இருந்து விலகினார். சுந்தர். சியை திருமணம் செய்து 20 ஆண்டுகள்
நிறைவு அடைந்ததை முன்னிட்டு டிவிட்டரில் வாழ்த்துச் செய்து வெளியிட்டிருக்கும் குஷ்பு, “20 ஆண்டுகள் முடிவு அடைந்துவிட்டது. எதுவுமே மாறவில்லை. இன்னும் நான் தான் பேசிக் கொண்டே இருக்கிறேன். அதே மாறாத புன்னகையுடன் நீங்கள் அதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். தனது கல்யாணத்திற்கே லேட்டாக வந்த ஒரே கல்யாண மாப்பிள்ளை நீங்கள் தான். எனது பலத்தின் தூணே, இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.