சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சில்லுக் கருப்பட்டி’. இப்படத்தினை இயக்கி இருந்த இயக்குநர் ஹலீதா சமீம் இதற்கு முன்னர் ‘பூவரசம் பீப்பி’ என்கின்ற படத்தை இயக்கி இருந்தார். ஆனால் அப்படம் பெரிதாக கவனம் பெறவில்லை. ஆனால் சில்லுக் கருப்பட்டிக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. தற்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்ற இயக்குநரை சந்தித்த ரசிகர் ஒருவர், ‘சில்லுக் கருப்பட்டி’ படத்திற்காக இயக்குநரை பாராட்டியதோடு மட்டுமின்றி,
மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குநருக்கு ஒரு அன்புப் பரிசு ஒன்றையும் வழங்கி இருக்கிறார். இதனை நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் ஹலிதா, “சில்லுக் கருப்பட்டி படத்தின் மூலம் உலகின் எல்லா மூலைகளிலும் உள்ள நல்ல உள்ளங்களை ஒன்றிணைக்க விரும்பினேன். அது நன்றாக நடந்து கொண்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சி. இந்த தருணத்தை மிக உன்னதமான தருணமாக உணர்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.