மலையாளத் திரையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய உயரத்தை அடைந்த நாயகி என்றால் அது ஐஸ்வர்யலட்சுமி தான். இவர் ஆக்ஷன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியீட்டிற்கு தயாராகி வரும் “சுருளி” படத்திலும் இவர் தான் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்டை பதிவிட்டிருந்தார்.
அது நடிகர் நடிகைகள் தேவை என்கின்ற விளம்பரம். அந்த விளம்பரத்திற்கு கீழே “இது போன்ற விளம்பரங்களை அலட்சியம் செய்யாதீர்கள். இது போன்று கிடைக்கும் சில வாய்ப்புகள் உங்களை வேறொரு உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம். அதற்கான சரியான உதாரணம் நான் தான்.இப்படிக் கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தித் தான், நான் இந்த இடத்தினை அடைந்திருக்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.