தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினி – கமலுக்கு அடுத்ததாக இரு பெரும் துருவங்களாக இருக்கும் நடிகர்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜீத் இருவரும் தான். இவர்களின் ரசிகர்கள் இருவரின் படங்களை முன்னிட்டு அதிகமாக சில நேரங்களில் அசிங்கமான முறையிலும் சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம். அதே நேரம் அத்தி பூத்தார் போல் சில சம்பவங்கள் நாட்டில் நடக்கும் போது இருவரின் ரசிகர்களும் இணைந்து கொள்வார்கள். அப்படி இருவரின் ரசிகர்க்ளும் தற்போது இணைந்திருக்கிறார்கள். இவர்கள் இணைவிற்கு காரணமாக இருப்பது நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட ஐ.டி. ரெய்டு தான்.
சில வருடங்களுக்கு முன்னர் அஜீத்குமார் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தபோது, அஜீத் பேசிய வீடியோவை தல மற்றும் தளபதி ரசிகர்கள் இருவருமே சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் அஜீத், “ஐ.டி ரெய்டு என் வீட்டில் நடந்ததால் எனக்கு சந்தோஷமே.. பல பொருட்கள் வீட்டில் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருந்தது. இந்த ரெய்டினால் தொலைந்துவிட்டதாக நினைத்த பல பொருட்கள் எங்களுக்கு திரும்ப கிடைத்துள்ளது. நான் வருமானவரிக்கு எதிராக எந்த சொத்தும் சேர்க்கவில்லை என்பதால் எனக்கு எந்த பயமும் இல்லை’ என்று பேசியிருக்கிறார். மேலும் அவர் பேசிய மற்றொரு வீடியோவில், ‘சாதாரண மனிதர்களின் வீடுகளீல் ரெய்டு செய்யாமல் மக்களின் வரிப்பணத்தை மோசடி செய்யும் அரசியல்வாதிகளின் வீடுகளில் சோதனை செய்யுங்கள்..” என்றும் அவர் பேசியுள்ளார்.