2004-2005ம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. கிட்டத்தட்ட 15 ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நயன், இன்றும் முன்னணி நடிகர்களோடு ஹீரோயினாக நடித்து வருகிறார். அஜீத்குமார், விஜய், ரஜினிகாந்த், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நயனின் மார்க்கெட் இன்றும் ஏறுமுகத்தில் தான் இருக்கிறது.
ஏற்கனவே ரஜினியுடன் குசேலன், சந்திரமுகி ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்த நயன்தாரா, சமீபத்தில் வெளியான தர்பார் படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது ரஜினியின் 168வது படமாக உருவாகி வரும் படத்திலும் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இது ரஜினியுடன் இவர் இணைந்து நடிக்கும் 4வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் என மூன்று நாயகிகள் இப்படத்தில் இருக்க, நான்காவது நாயகியாக நயன்தாராவும் இணைந்திருக்கிறார்.