சமீபத்திய இளம் நடிகர்களில் கவனிக்கத் தக்க நடிகராக வலம் வருகிறார் ஹரிஷ் கல்யாண். அவரது நடிப்பில் வருகிற 13-ஆம் தேதி தாராள பிரபு என்ற படம் வெளியாக இருக்கிறது. கிருஷ்ணா மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
விழாவில் படத்தின் பாடல்கள் லைவாக பாடப்பட்டன. பெரிய மாஸ் நடிகர்களின் இசை விழா போல ஹரிஷ் கல்யாண் படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பது இதுவே முதல்முறை. காதல் காமெடி நிறைந்த பக்கா கமர்சியல் பேக்கேஜ் ஆக இப்படம் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்