நடிகர் விஜயின் அப்பாவும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் ஒருவருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களும் அரசியல் களத்தில் குதிக்க ஆயத்தமாகி வருபவர்களுமான ரஜினி, கமல் ஆகியோருக்கு எதிரான கருத்தைக் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில், பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரும் போது, விஜய் இந்த மண்ணின் மைந்தன். அவர் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது/ ரஜினி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறார்.
கமல்ஹாசன் அதை வேடிக்கைப் பார்க்கிறார். ஆம் நான் கிறிஸ்தவன் தான். விஜயை ஜோசப் விஜய் என்றும் என்னை அலெக்ஸ் சந்திரசேகர் என்றும் அழையுங்கள்.” என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திச் சென்றப்பின்னர், எஸ்.ஏ.சியின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிவதாகவும், இதற்கு முன்னர் ரஜினியும் கமலும் அரசியலில் ஒன்றாக பயணிக்க வேண்டும், அவர்களின் தம்பிகளுக்கும் வழிவிட வேண்டும் என்று பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் அதற்குள் இப்படி பேச என்ன காரணம் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.