Tamil Movie Ads News and Videos Portal

இந்திராகாந்தி வேடத்தில் ரவீணா தாண்டன்

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் தங்கச் சுரங்கத்தில் அடிமையாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி அதிரடியாகப் பேசியபடி “கே.ஜி.எப் சேப்டர் 1” திரைப்படம். இப்படத்தில் யஷ் என்பவர் நாயகனாக நடிக்க, பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதிலும் யஷ் நாயகனாக நடிக்கிறார். வில்லன் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தின் கதை சரித்திரக் கால பின்னணியோடு தொடங்கும் பீரியட் ப்லிம்மாக உருவாகிறது. இதில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வேடத்தில் ஹிந்தி நடிகை ரவீணா தாண்டன் நடிக்கவிருக்கிறார். இவர் தமிழில் ஆளவந்தான், சாது ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மறைந்த முன்னாள் பிரதமரின் வாழ்க்கை என்பதால், எந்த தவறும் ஏற்பட்டுவிடாதவாறு மிக கவனமாக அக்கதாபாத்திரத்தை படக்குழுவினர் கையாண்டு வருகின்றனர்.