வழக்கமான கதாநாயகியாக நடிக்காமல், அதிலிருந்து விலகி வித்தியாசமான கதைக்களன் கொண்ட படங்களில் தங்கள் முத்திரையைப் பதிக்கும் நாயகிகள் தமிழில் வெகு சிலரே. அந்த வெகு சிலரில் மிக முக்கியமானவர் வரலட்சுமி சரத்குமார். தாரைத் தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார் ஆகிய படங்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டன. இப்பொழுது அந்த வரிசையில் உருவாகும் புதிஅய் திரைப்படமான ‘டேனி’ திரைப்படத்தில் போலீஷ் அதிகாரியாக நடித்து வருகிறார் வரலட்சுமி. ஜி.முத்தையா, எம். தீபா தயாரிப்பில் லா.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிப்பது குறித்து பேசும் போது, “இயல்பாகவே நான் துணிச்சலான பெண். திரைப்படங்களில் கூட பயந்தது போல நடிக்க வேண்டிய காட்சிகள் கொஞ்சம் சிரமப்படுவேன். ஆனால் இப்படத்தில் என் குணாதிசயத்திற்கு ஏற்றார் போன்ற கதாபாத்திரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.