தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படத்தினை அனைவரும் “சுருளி” என்றே அழைத்து வந்தனர். அப்படத்தின் தலைப்பு ‘சுருளி’ தான் என்று பலரும் முடிவு செய்திருந்த நிலையில் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடல் வரியான ‘ஜகமே தந்திரம்’ என்ற பாடலின் வரியினையே படத்தின் தலைப்பாக வைத்து மோஷன் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
அதில் தனுஷ் வேஷ்டி சட்டை கட்டிக் கொண்டு, முதுகிலும் தோளிலும் தொங்கும் துப்பாக்கிகளுடன் போஸ் தருகிறார். கேங்க்ஸ்டர் வகைப்படமாக உருவாகி வரும் இப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “இது வழக்கமான கேங்க்ஸ்டர் வகைப்படமாக இருக்காது, ஒரு நண்பனின் துரோகமும், அதைத் தொடர்ந்த பழி வாங்கலும் என திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாக செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. இப்படமும் தனுஷுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தருவதோடு அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.