
சாத்தான்குளத்தில் இரு காவலர்கள் சாத்தான்களாய் மாறி பென்னீக்ஸ் ஜெயராஜ் ஆகிய எளிய மனிதர்களின் உயிரைப் பறித்துள்ளனர். அதாவது லாக்கப் டெத் செய்துள்ளனர். இதற்காக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பென்னீக்ஸ் ஜெயராஜ் குடும்பத்தினர் மன்றாடி வருகின்றனர். அவர்களோடு சேர்த்து ஒட்டுமொத்த மனிதநேய மிக்கவர்களும் சேர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு பேராதரவு கொடுக்கும் பொருட்டு கோடம்பாக்கமும் அவர்கள் பக்கமே நிற்கிறது. நடிகர்களில் கமல்ஹாசன் துவங்கி ஜெயம்ரவி, ஷாந்தனு, ஜிவி பிரகாஷ், காஜல் அவர்வால், வைரமுத்து, பா.ரஞ்சித், விவேக் என ஒட்டுமொத்த திரையுலகமும் குரல் கொடுத்து நீதிக்கு வலு சேர்க்கிறது. நிச்சயமாக இனி அதிகாரத்தின் கைகள் லத்தியைத் தூக்கும் முன் சற்று யோசிக்கும் என்று நம்புவோம்