70 தொகுதிகளை உள்ளடக்கிய டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களைப் பெற்று அறுதி பெறும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறது. மீதமுள்ள 8 இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதா எதிர்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இது குறித்து டிவிட்டரில் கருத்து வெளியிட்டிருக்கும் நடிகை குஷ்பு,
“டெல்லியில் நாம் முழுவதுமாக நசுக்கப்பட்டிருக்கிறோம், நாம் சரியாகத்தான் செய்கிறோமா..? நாம் சரியான பாதையில் தான் போகிறோமா..? என்கின்ற கேள்வியை கேட்டுக் கொண்டால் நமக்கு பதிலாகக் கிடைப்பது இல்லை என்பது தான். கட்சியின் மேல்மட்டம், நடுமட்டம் மற்றும் அடிமட்டம் என எல்லாவற்றிலும் மாற்றம் தேவை. அதை உடனடியாக செய்ய வேண்டும். இப்பொழுது இல்லை என்றால்; அது எப்பொழுதும் இல்லை. மக்கள் மோடி கூட்டத்தையும் மொத்தமாக முடக்கியிருக்கிறார்கள். இந்த வெற்றியை சாதித்த முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினருக்கு என் வாழ்த்துக்கள்..” என்று பதிவிட்டிருக்கிறார்.