நடிப்புலகில் பன்னெடுங்காலமாக கோலோச்சி வருபவராக நயன்தாரா இருந்த போதிலும் கூட, அவர் ஏற்று நடித்த வேடங்களில் வித்தியாசமான வேடங்கள் மிகவும் குறைவுதான். அதிலும் குறிப்பாக சரித்திர காலத்துப் படங்களில் நயனின் பங்களிப்பு என்று பார்த்தால் அது சென்ற ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ஸ்ரீராமராஜ்ஜியம் படம் ஒன்று தான். காஷ்மோரா படத்தையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம் தான். ஆனால் அது முழுக்க முழுக்க சரித்திரக் காலப்படம் என்கின்ற வகைமையின் கீழ் வராது.
தற்போது மீண்டும் ஒரு சரித்திரக்காலப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு நயன்தாராவிற்கு அமைந்திருக்கிறது. அதுவும் கன்னடத்தில். ராசேந்திரபாபு இயக்கத்தில் தர்ஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் முன்னாள் நாயகி சுமலதா மற்றும் திவ்யா ஸ்பந்தனா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இதற்கு முன்னர் 2010ல் உபேந்திரா நடித்த “சூப்பர்” என்கின்ற கன்னடப் படத்தில் நயன் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.