Tamil Movie Ads News and Videos Portal

“நெஞ்சம் மறப்பதில்லை” – மறக்க முடியாத படமாக மாற்றுவாரா செல்வராகவன்..!?

தமிழ் சினிமா இயக்குநர்களின் மத்தியில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக அடையாளம் காணப்பட்டவர் இயக்குநர் செல்வராகவன். அவரின் 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் அவரை தனித்துவமான இயக்குநராக அடையாளம் காட்டின. புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் கூட, இன்றும் அப்படத்தினைப் பற்றி சிலாகிக்கும் விமர்சகர் மற்றும் ரசிகர் வட்டம் உண்டு. ஆனால் அதற்கு அடுத்து வெளியான அவரது படங்களில் அவரது ஆளுமை இல்லை. ‘மயக்கம் என்ன’ ‘இரண்டாம் உலகம்’ ‘என்.ஜி.கே’ போன்ற படங்கள் ரசிகர்களை பெரிதாக வசீகரிக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஆகியோர் நடித்த திரைப்படம் “நெஞ்சம் மறப்பதில்லை”. இப்படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கியதால் இன்று வரை வெளியாகவில்லை. தற்போது இப்படம் டிசம்பர் 25 அல்லது 27 தேதிகளில் கண்டிப்பாக வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அனுபவத்தையாவது மறக்க முடியாத அனுபவமாக மாற்றுவாரா செல்வராகவன் என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.