அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சி எம்.ஜி.ஆர் காலம் தொட்டே இருக்கிறது. ஆனால் யாருக்கும் கைகூடாத அந்தக் கனவு தற்போது இயக்குநர் மணிரத்னத்திற்கு கைகூடி இருக்கிறது. ஆனால் அவர் மட்டுமின்றி பலரும் ‘பொன்னியின் செல்வன்’ கதையினை தற்போது கையிலெடுத்திருப்பதால், அந்த நாவலை படமாக்குவதற்கான உரிமை யார் கைவசம் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே மணிரத்னம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்கியிருக்க.
ரஜினியின் இளையமகளான சௌந்தர்யா ஏற்கனவே அறிவித்தபடி அந்த நாவலை வெஃப் சீரிஸ் ஆக எடுக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கப் போகிறார் என்கின்றனர். மேலும் சரவணராஜா என்பவரும் தவச்செல்வன் என்பவரும் இதே நாவலை அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கி இருக்கின்றனர். இதில் தவச்செல்வன் எம்.ஜி.ஆர் உருவப்படத்தைக் கொண்டு இந்த அனிமேஷனை உருவாக்கி இருக்கிறார். சரவணக்குமார் எடுத்த அனிமேஷன் பொன்னியின் செல்வனின் முதல் பகுதியை யூ.டியூப்பிலும் வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்க்கும் போது, ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் உரிமை யாரிடம் தான் இருக்கிறது என்கின்ற கேள்வி எழுகிறது.