கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் நாடெங்கும் பள்ளிகள், கல்லூரிகள், மென்பொருள் நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் ஆகியவை பெரும்பாலும் மூடப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பெரியளவில் கூடாதவாறு இருக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவின் பாதிப்பால் வெளியாகவிருக்கும் படங்கள் தள்ளிப் போவதோடு, படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியன் செல்வன்” படத்தின் நான்காம் கட்டப் படப்பிடிப்பை புனே சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்த திட்டமிட்டு வந்தார். ஆனால் தற்போது இந்தப் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பொன்னியின் செல்வன் “ முதல் பாகத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் இதன் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகள் நிறைவடைய அதிக காலம் ஆகும் என்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முதல் பாகம் வெளியாகும் என்று தெரிகிறது.