தற்போது சினிமா இன்டஸ்ட்ரியின் தேர்தலையும் மக்கள் கூர்ந்து கவனிக்கத் துவங்கி இருக்கின்றனர். இந்தமுறை தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் போட்டி பலமாக இருக்கும் போல் தெரிகிறது. பாதுகாப்பு அணி என்றபெயரில் தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்பட பல அனுபவம் வாய்ந்தவர்கள் களத்தில் நிற்கிறார்கள். அவர்களின் விபரமும் அறிக்கையும் கீழே:
“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு கருதி, தமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு சிறந்த அணியை உருவாக்கி, வருகின்ற தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் (2020-22) போட்டியிடுகிறது. அணியின் அங்கத்தினர்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
Contesting for Office Bearers:
திரு T. சிவா, தலைவர்
திரு K. முரளிதரன் (LMM), பொருளாளர்
திரு PL. தேனப்பன், செயலாளர்
திரு JSK. சதிஷ் குமார், செயலாளர்
திரு RK. சுரேஷ், துணை தலைவர்
திரு G. தனஞ்செயன், துணை தலைவர்
Contesting for Executive Committee (EC) Members:
திரு. K. ராஜன்
திரு. ராதாரவி
திரு. K.S. ஸ்ரீனிவாசன்
திரு. சித்ரா லக்ஷ்மணன்
திரு. H. முரளி
திரு. SS. துரைராஜ்
திரு. K. விஜயகுமார்
திரு. RV. உதயகுமார்
திரு. மனோஜ் குமார்
திரு. S. நந்தகோபால்
திரு. மனோபாலா
திரு. பாபு கணேஷ்
திரு. பஞ்சு சுப்பு
திரு. M.S. முருகராஜ்
திரு. வினோத் குமார்
திரு. ரங்கநாதன்
திரு. பஞ்ச் பரத்
திரு. மதுரை செல்வம் மற்றும் மூன்று தயாரிப்பாளர்கள்
திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக திரைப்படங்கள் எடுக்கவும்,
திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழவும்
உழைப்பதே எங்கள் அணியின் நோக்கம்…
உங்கள் நல்லாதரவையும், வாழ்த்துகளையும் எதிர்பார்க்கிறோம்…