Tamil Movie Ads News and Videos Portal

அதர்வாவுடன் இணைந்தார் நந்தா

அதர்வா போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படத்தை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் அதர்வாவுடன் நடிக்க இருக்கிறார் நந்தா.

வெகு சில நடிகர்களே எந்த மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் அந்தக் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் நடிக்க சம்மதம் தெரிவிப்பார்கள். அந்த வகையில் க்யூட் அப்பாவி இளைஞனாக இருக்கட்டும், அல்லது சாந்தமான சைக்கோ கொலையாளியாக இருக்கட்டும் தான் ஏற்கும் பாத்திரங்களில், அப்படியே ஒட்டிக்கொண்டு, கதாப்பத்திரமாக மாறிவிடும் தன்மை கொண்டவர் நடிகர் நந்தா. சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான “ “வானம் கொட்டட்டும்“ படத்தில் இரட்டை வேடத்தில் அனைவரையும் கவரும் நடிப்பை தந்திருந்தார். தற்போது அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் போலீஸ் திரில்லர் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்.