வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குநர் என்ற பெயர் பெற்ற இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருக்கும் அடுத்த படம் “சைக்கோ”. இதில் உதயநிதி ஸ்டாலின் கண்பார்வை தெரியாத இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதிதிராவ், நாயகியாகவும், இயக்குநர் ராம் போலீஷ் அதிகாரியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. டபுள் மீனிங் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலரும் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. இரத்தம், திகில், மண்டை ஓடு என்று படத்தின் தலைப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையிலான காட்சிகள் அணிவகுக்கின்றன. டிரைலரில் வசனம் ஏதும் இடம்பெறவில்லை.