Tamil Movie Ads News and Videos Portal

முன்றாம் வாரத்தில் வெற்றிநடைபோடும் “வி1”

புதிய முயற்சி பாராட்டும்படி இருந்தால் அதற்கான பாராட்டையும் அங்கிகாரத்தையும் என்றும் அளவில்லாமல் அளிப்பதில் முதன்மையானவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அவர்களின் அன்பால் “வி1” திரைப்படம் தற்போது முன்றாம் வாரத்தில் முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.

பல எதிர்பார்ப்புகளோடு இன்று வெளியாகியிருக்கும் சூப்பர்ஸ்டார் நடித்த “தர்பார்” படம் வெளியான் இந்நாளிலும் “வி1” திரைப்படம் சில திரையரங்குகளில் திரையிடப்படுவது பெரும் மகிழ்ச்சி என்கின்றனர் “வி1” படக்குழுவினர்.

இந்த வெற்றிக்கு வித்திட்ட அனைத்து ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை “வி1” படக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தங்களது புதிய பட அறிவிப்பை மிக விரைவில் “வி1” படக்குழு தெரிவிக்கவுள்ளது.