நேற்றைய தினம் அரசியல் வட்டாரங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் ஹாட் டாப்பிக் என்றால் அது, சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய மீட்டிங் தான் அது. அந்த மீட்டிங் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கலந்தாலோசிக்க இந்தக் கூட்டம் நடைபெற்றது. அவர்களிடம் பல கேள்விகள் இருந்தது.அதெற்கெல்லாம் பதில் சொல்லி, திட்டத்தை விளக்கியதும் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டது. தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை நானோ, கமலோ நிரப்புவோமா..? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இந்த கூட்டம் தனிப்பட்ட முறையில் எனக்கு சில விசயங்களில் ஏமாற்றத்தை அளித்தது. அது என்ன விசயம் என்பதை பின்னர் தெரிவிக்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார். தேர்தலை சந்திப்பது தொடர்பாக நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே ஏமாற்றம் அடைந்ததாக கூறியிருப்பதால், வரும் சட்டமன்ற தேர்தலை ரஜினிகாந்த் எதிர்கொள்வாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.