‘கதை இலாகா’ என்ற சொல்லாடல் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட புழக்கத்தில் தற்போது இல்லை என்றே சொல்லலாம். முன்னர் எல்லாம் எல்லா தயாரிப்பு நிறுவனங்களிடமும் ஒரு கதை இலாகா இருக்கும். அதில் உறுப்பினர்களாக குறைந்தது நான்கைந்து நபர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவருமே படித்து ஓகே என்று சொல்லும் கதைகளைத்தான் அந்த நிறுவனம் படமாக்கும். தற்போது இந்த வழக்கம் பெரும்பாலும்
நடைமுறையில் இல்லை. ஆனால் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன், தனக்கென்று ஒரு தனி கதிஅ இலாகா டீமை வைத்திருக்கிறாராம். அதில் 7 முதல் 10 உதவி இயக்குநர்கள் இருக்கிறார்களாம். அவர்கள் அனைவருமே படித்து ஒகே என்று சொல்லும் கதைகளைத்தான் அவர் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கிறாராம். தற்போது அந்த கதை இலாகாவை மேலும் வலுவாக்கும் பொருட்டு, இன்னும் சில நல்ல சினிமா சிந்தனையுள்ள உதவி இயக்குநர்களை தேடிவருகிறாராம் சிவகார்த்திகேயன்.