அசுரன் படத்தின் அசுரத்தனமான வெற்றியைத் தொடர்ந்து, வெற்றிமாறன் தனது அடுத்த படத்தை தொடங்கவிருக்கிறார். ஏற்கனவே அறிவித்தபடி காமெடி நடிகர் சூரியை கதை நாயகனாக வைத்து இப்படம் உருவாகவிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன, “முன்னர் தான் இவரை வைத்து படம் செய்தால், படம் போனி ஆகாது என்பது போன்ற சொற்றொடர்கள் எல்லாம் இருந்தது. இப்பொழுது அந்த நிலைமை மாறிவிட்டது. கதைக்குத்தான் நாயகன் தேவை. இந்தக் கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்பதை அறிந்து நாயகனை தேர்வு செய்திருக்கிறோம். அப்படி தேர்வு செய்யும் போது படம் நிச்சயம் வெற்றியடையும் என்பதால், இந்தப் படமும் கண்டிப்பாக வெற்றி அடையும்.” என்று தெரிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் வெகு சீக்கிரத்தில் தொடங்கவிருக்கிறது.