‘நாய்கள் ஜாக்கிரதை” ”மிருதன்” “டிக் டிக் டிக்” ஆகியப் படங்களை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் தற்போது ஆர்யா, சாயிஷா ஷேகல், மாசூம் சங்கர் நடிப்பில் “டெடி” என்ற புதிய படத்தை இயக்கியிருக்கிறார். வெகு விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் தங்களது திருமணத்திற்குப் பிறகு ஆர்யா – சாயிஷா ஜோடி முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறது. படத்தின் பெயர் மற்றும் படம் குறித்துப் பேசிய இயக்குநர் “இப்படத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான “டெடிபியர்” ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறது. படத்தின் பெரும்பாலானா காட்சிகளில் இடம்பெறுவதால், படத்திற்கு டெடி என்றே பெயரிட்டுவிட்டோம். டெடிபியர் தொடர்பான காட்சிகள் அனைத்தும் உயர்தர தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து உருவாக்கியிருக்கிறோம். ஆக்சன் கலந்த திரைப்படமாக இருந்தாலும் இப்படம் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும்..” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.