Tamil Movie Ads News and Videos Portal

”சூரத் தேங்கா உடைடா.. உடைடா..” சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

காப்பான் திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்திருக்கும் திரைப்படம் “சூரரைப் போற்று”. அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை 2D எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக சூர்யாவே தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது. சில ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் வெளியான எந்தவொரு படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இதனால் சோர்ந்து போயிருந்த சூர்யா ரசிகர்களை சூரத் தேங்காய் உடைக்கும் அளவிற்கு உற்சாகம் ஏற்றியிருக்கிறது இப்படத்தின் டிரைலர். ’கையில ஆராயிரம் ரூபாயை வச்சிக்கிட்டு ஒரு ஏரோப்பிளேன் கம்பெனி ஆரம்பிக்கப் போறோன்னு சொன்னப்ப இந்த உலகமே யாருடா இந்த லூசுக் கூ..ன்னுதான் பாத்திச்சி..” என்ற சூர்யாவின் வாய்ஸ் ஓவரில் தொடங்கும் டீஸர், “இப்ப நானும் வேறடா… கிட்ட வந்து பாருடா..” என்று ப்ரேமுக்குப் ப்ரேம் மிரட்டுகிறது. ‘நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா புதிதாக ஒரு மிடுக்கோடு தோன்று அக்கதாபாத்திரத்திற்கு மெருகேற்றியிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது. சுதா கொங்கராவின் இயக்கத்தில் ஒலி, ஒளிக்கலவைகள் மற்றும் ஜி.வியின் இசைக்கோர்ப்பு ஆகியவை காட்சிக்கு வலுவூட்டுகிறது. “சூரரைப் போற்ற” இப்பொழுதே சூர்யா ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.