சமீபத்தில் ஜி தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் சினிமாத்துறையினருக்கு வழங்கிய விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் நடிகை நயன்தாராவிற்கு பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் நடிகை என்பதால் ஸ்ரீதேவி விருதும், மக்களுக்கு விருப்பமான நடிகை என்னும் விருதும் அளிக்கப்பட்டது.
இந்த விழாவில் அவர் பேசும் போது, “கடவுளின் அருள் இருந்தால் எல்லாமே சாத்தியம் தான். ஆரம்பத்தில் ஹீரோக்களுடன் டூயட் பாடும் கதாநாயகியாக மட்டுமே நடித்துக் கொண்டு இருந்த எனக்கு இப்பொழுது வரும் வாய்ப்புகள் எல்லாமே கதையம்சத்துடன் தான் வருகின்றது. இது கூட கடவுளின் அருளால் தான். வாழ்க்கையில் எல்லோருக்குமே ஏற்ற இறக்கங்கள் வரும். என் வாழ்க்கையிலும் அப்படி வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் கடவுள் தான் எனக்குத் துணையாகவிருந்தார். இப்பொழுது நானும் என் காதலர் விக்னேஷ் சிவனும் சந்தோசமாக இருக்கும் புகைப்படங்களை வலைதளங்களில் பார்க்கும் பலர் பொறமைப்படுகிறார்கள்.” என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது யாரை என்பது தான் தற்போதைக்கு கோடம்பாக்கத்து சிப்ஸ்.