முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகர் நடிகைகள் பின்னர் சீரியலில் நடிக்கத் தொடங்குவார்கள். ஆனால் இப்பொழுதோ அந்த நிலைமை மாறி வருகிறது. சினிமாவில் மார்க்கெட் இருக்கும் போதே நடிகைகள் சினிமாவிற்கு இணையாக வெஃப் சீரிஸ் தொடர்களில் நடிக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே சமந்தா ஒரு வெஃப் சீரிஸில் நடிக்கவிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமன்னாவும் ஒரு வெஃப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ராம் சுப்ரமணியன் என்கின்ற புதியவர் இயக்கவிருக்கும் இந்த வெஃப் சீரிஸ் தந்தை மகள் இருவருக்குமான உறவை மையப்படுத்தி உருவாகவிருக்கிறது. இதில் மகளாக தமன்னாவும், அப்பாவாக ஜி.எம்.குமாரும் நடிக்கவிருக்கிறார்கள்.