Tamil Movie Ads News and Videos Portal

பிரபுதேவா படத்திற்குக் கிளம்பியிருக்கும் எதிர்ப்பு

நடன இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரபுதேவா, பின்னர் நடிகராகி இயக்குநராகவும் உயர்ந்தார். தமிழில் அவர் இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அது போல் ஹிந்தியில் அக்ஷய்குமார், சல்மான்கான் நடிப்பில் ரவுடி ரத்தோர், ஆக்ஷன் ஜாக்ஷன், வாண்டட் ஆகியப் படங்களையும் இயக்கியிருக்கிறார். தற்போது மீண்டும் சல்மான்கானை வைத்து தபாங் 3 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் இந்து சாமியார்கள் சிலர் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மராட்டிய மாநிலம் இந்து ஜன்ஜக்ருதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக திரைப்படத் தணிக்கைத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் டிரைலரில் இடம் பெற்ற அப்பாடல் மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதால் படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்வதோடு படத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.