லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே கலை இயக்குநரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது விஜய் சேதுபதி கலை இயக்குநரை முத்தமிடுவதைப் பார்த்து, விஜய் தனக்கு ஒரு முத்தத்தைக் கேட்டுப் பெற்றார். அந்த புகைப்படத்தை வெளியிடாமல் பாதுகாத்து வந்தப் படக்குழு, தற்போது விஜய் சேதுபதி வாயிலாகவே அப்புகைப்படத்தினை வெளியிட்டிருக்கிறது.

அக்டோபர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது முடிவடைந்திருக்கும் சூழலில் இன்னும் 40 நாட்களில் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள அனைத்தையும் முடித்து படத்தினை ஏப்ரல் 9ல் வெளியிட பரபரப்புடன் உழைத்துக் கொண்டிருக்கிறதாம் படக்குழு. மேலும் படத்தின் டீஸர், டிரைலர், இசை வெளியீடு இவற்றிலும் பட்டையைக் கிளப்ப தனியாக குழு அமைத்தும் யோசித்து வருகிறார்களாம்.