Tamil Movie Ads News and Videos Portal

சூர்யாவின் 40 படத்தை இயக்கும் வெற்றிமாறன்

’அசுரன்’ படத்தின் அசுரத்தனமான வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து வெற்றிமாறன் யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அவர் சூர்யாவின் படத்தை இயக்கலாம் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் ஏற்கனவே அறிவித்தபடி, நா.முத்துக்குமாரின் கவிதை தொகுப்பான ‘பட்டாம்பூச்சி விற்பவன்’-யை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார். இதில் நாயகனாக சூரி

நடிக்கிறார். இந்நிலையில் சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி இணையவிருப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. அசுரன் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு இதை உறுதி செய்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் “அசுரன் படத்தின் அசுர வெற்றியைத் தொடர்ந்து சூர்யா 40 படத்தை வெற்றிமாறன் இயக்க நான் அதை தயாரிக்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி சேர்வது உறுதியாகியிருக்கிறது.