கும்கி, மைனா போன்ற திரைப்படங்களுக்கு மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்து பாராட்டைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் சுகுமாரன். இவர் தற்போது கும்கி 2 படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவரது ஒளிப்பதிவில் மாமனிதன், ஜிப்ஸி, தேன் ஆகியப் படங்கள்
ரீலீஷுக்கு தயாராக இருக்கின்றன. சீனு இராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “மாமனிதன்” திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் சுகுமாரன் “இப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அவர்களின் நடிப்பிற்கு அங்கீகாரமாக கண்டிப்பாக இருவருக்குமே தேசிய விருது கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்கவில்லை என்றால் அது தேசியவிருதுக்கு அவமானம்” என்று கருத்து கூறியுள்ளார்.