Tamil Movie Ads News and Videos Portal

”சைக்கோவை ஏன் மன்னிக்கலாம்” – மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ் ஹைதிரி, நித்யாமேனன், இயக்குநர் ராம் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் “சைக்கோ”. சமீபத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதே நேரம் படம் அதீதமான வன்முறையை காட்சிபடுத்தியிருக்கிறது. கொடூரமான கொலைகள் செய்யும் சைக்கோவை மன்னிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று கேள்வி எழுந்தது.

 

இதற்கு பதிலளித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின், “படத்தில் காணப்படும் சைக்கோ கதாபாத்திரம் மத கோட்பாடுகளாலும், பள்ளிக்கூடத்தின் கட்டுப்பாடுகளாலும் தான் அப்படி ஆகிறான். படத்தின் நாயகி அவனின் பலவீனத்தை புரிந்து கொள்வதால், அவனை ஒரு குழந்தையாகப் பார்க்கிறாள். அதனால் அவனது குற்றங்களை அவளால் மன்னிக்க முடிகிறது. இது எப்படி தவறாகும்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இப்படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்தவர் இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநர் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.