சின்னத்திரைத் தொகுப்பாளினியாக இருந்து ‘மேயாத மான்’ படத்தின் மூலம் சினிமா நாயகியாக உயர்ந்திருப்பவர் ப்ரியா பவானி சங்கர். சில வாரங்களுக்கு முன்னர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுடன் காதலில் இருக்கிறார் என்பதான வதந்தி இவரைப் பற்றிக் கிளம்பியது. இந்த வதந்திக்கு எஸ்.ஜே.சூர்யாவே முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் கல்லூரியில் தன்னோடு படித்த நீண்ட நாள் நண்பர் ஒருவரை தான் காதலிக்கும் தகவலைத் சூசகமாக வெளியிட்டுள்ளார். அதில், “10 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி காலத்தில் நம்பிக்கையுள்ள கவர்ச்சியில்லாத சுமாரான அழகுடன் இருந்த என்னை நீ காதலித்த போது எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஆனால் இன்றும் நீ அதே அன்புடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. நீ நான் கேட்க மறந்த இசை. சூழ்நிலைக்கு ஏற்ப மாறாத பேராண்மை. பல நட்சத்திரங்கள் நிறைந்த என் வானில் நீயே சூரியன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் மா..” என்று கூறியுள்ளார்.