Tamil Movie Ads News and Videos Portal

அக்காலி- விமர்சனம்

ப்ளாக் மேஜிக் கதைக்களம் ரசிகனை மேஜிக் செய்ததா?

9 வருடங்களுக்கு முன்பாக ஒரு மர்ம வழக்கில் இருந்த கற்பனைக்கு அப்பாற்பட்டு நடந்த விசயங்களை ஒரு காவல் அதிகாரி விவரிக்கிறார். சாத்தான் வழிபாட்டின் துணையோடு தங்களை சக்தி வாய்ந்த பிறவிகளாக மாற்றத்துடிக்கும் ஒரு கூட்டம். மேலும் கல்லறையில் இருந்து பிணங்கள் எல்லாம் காணாமல் போகிறதாய் ஒரு வழக்கு. ஒரு இளம் பெண் ஒரே இரவில் அமானுஷ்யமாக மாறுகிறாள். இப்படியான குழப்ப கும்மிகளுக்கான விடை என்ன? என்பதே படத்தின் குழப்பம் நிறைந்த திரைக்கதை

நடிகர்களாக, ஜெயக்குமார், நாசர், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, யாமினி, தாரணி உள்பட திரையில் தோன்றும் யாவரும் குறை சொல்ல முடியாதளவில் நடித்துள்ளனர். ஷாக்கிங் ரியாக்சன்கள், எமோஷ்னல் ரியாக்சன்கள் என கலந்து கட்டி நன்றாக நடித்துள்ளனர்

திகில் அமானுஷ்யம் நிறைந்த இக்கதைக்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் மிக மிக முக்கியம். அதை மனதில் ஏற்றி உழைத்துள்ளனர் இசை அமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும். மேலும் ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி மிகச்சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு பிராபர்டியிலும் அத்தனை வெரைட்டி. VFX டீம் அசாத்தியப் படுத்தியுள்ளனர். டெக்னிக்கலாக படம் அட்டகாசம். ஆனால் திரைக்கையாக படம் படு வீக். எவ்வளவு குழப்பத்தோடு வேண்டுமானாலும் படம் துவங்கலாம். ஆனால் போகப்போக எல்லா குழப்பங்களுக்கும் தீர்வை தெளிவோடு ரசிகனுக்கு கடத்த வேண்டும். அந்த விசயத்தில் அக்காலி கோட்டை விட்டுவிட்டதால் படம் மனதில் காலியான இடத்தையே பெறுகிறது
2.25/5
-மு.ஜெகன் கவிராஜ்