Tamil Movie Ads News and Videos Portal

ரெட்ரோ- விமர்சனம்

டைம் மிஷினில் சென்று பத்தாண்டுகளுக்கு முன் உள்ள சூர்யாவை காண வேண்டுமா.. ரெட்ரோவிற்குச் செல்லுங்கள்!

தூத்துக்குடியின் தாதா ஆன ஜோஜு ஜார்ஜ் ஒரு கடத்தல் காரரும் கூட. அவரின் வளர்ப்பு மகனான சூர்யா ஆரம்பத்தில் அப்பாவிற்கு உற்ற துணையாக இருக்கிறார். பூஜா ஹெக்டேவின் காதலுக்குப் பின் சூர்யா திருந்துகிறார். But அந்த திருந்தல் அப்பாவிற்குப் பிடிக்கவில்லை .அதுவரை காதல் காமெடி என பயணித்த படம் அதன்பின் வார் மோட்-க்கு மாறுகிறது. அப்புறம் மெட்ரோ வேகத்தில் செல்கிறது இந்த ரெட்ரோ

நிச்சயமாக இந்தப் படத்தில் புத்தம் புதிய சூர்யா! காதல் காமெடி ஆக்சன் என கலந்துகட்டி கபடி ஆடியிருக்கிறார். . சிரிப்பே இல்லாமல் இறுக்கமான முகத்துடன் வரும் முதல்பாதியிலும், சிரிப்போடு சீறும் இரண்டாம் பாதியிலும் திரையில் சூர்ய தாண்டவம். பூஜா ஹெக்டேவிற்கு வலுவான கதாப்பாத்திரம். ருக்மணியாக அவரும் மனதில் நிறைகிறார்.ஜோஜு ஜார்ஜ் கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளார். நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட இன்னும் பிறரும் ஜொலித்துள்ளனர்

சந்தோஷ் நாராயணன் கனிமா சாங்கில் ரசிகர்களுக்கு இனிமா கொடுத்துள்ளார். குறிப்பாக பின்னணி இசையில் ஒரு அசத்து அசத்தியுள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா தரமான ஒளிப்பதிவைச் செய்துள்ளார். அந்தமான் அழகை அற்புதமாக அள்ளி வந்து கண்களுக்கு விருந்தளிக்கிறார்.

முதல்பாதி தந்தை மகன் வார் என பயணிக்கும் படம், இரண்டாம் பாதியில் வேறோர் வழியில் பயணிக்கிறது. சூர்யா யார்? என்று தெரியும் காட்சியில் இருந்து படத்தின் வேகம் சீராகப் பயணிக்கிறது. அதிகாரத்தின் கரங்கள் எப்போதும் எளியவர்களை ஒடுக்கவே செய்யும். அதை நேர் செய்ய ஒரு நேர்மையாளன் வரும்போது அதிகாரம் சலனப்படும். அந்தச் சலனம் ஏற்படுத்தும் அதிர்வை நேர்மை சமாளிக்கும் என்பது பொதுவிதி. அந்த விதியை க்ளைமாக்ஸில் வைத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

ரெட்ரோ- சூர்யாயிசம்
3/5
-வெண்பா தமிழ்