பெண் சார்ந்த ஒரு நல்லுணர்வு சினிமா இந்த fire
பல் மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் இளைஞர் ஒருவர் பெண்களை ஏமாற்றிய நிஜம் ஊரெல்லாம் கதை போல பேசப்பட்டு வந்தது.. நினைவிருக்கிறதா? நினைவில்லை என்றால் பயர் படம் பாருங்கள் தெரியும். யெஸ் பெண்களை எமோஷ்னலாக ஏமாற்றும் ஒருவனின் கதையை ரசிகனை ஏமாற்றாமல் எடுக்க முயன்றுள்ளார் அறிமுக இயக்குநர் ஜே.சதீஷ்குமார். தயாரிப்பாளராக வென்ற அவர் இயக்குநராக வென்றுள்ளாரா?
பாலாஜி முருகதாஸ் பெண்களை மிகவும் சூசகமாக ஏமாற்றும் வித்தைக்காரர். அவரது மன்மத வித்தையில் வீழ்த்தப்பட்ட பெண்கள், ஒரு கட்டத்தில் அவரையே வீழ்த்த முடிவெடுக்கின்றனர். அவர்களின் அதிரடி முடிவிற்குள் இருக்கும் விசயங்களையும், அதற்கு முன் எதிர்பாராமல் நடக்கும் ட்விஸ்ட்களையும் திரைக்கதை ஆக்கியுள்ளார் இயக்குநர். இந்தப் படத்தின் கதையை சுவாரஸ்யம் கருதி இதோடு நிறுத்திவிடுவோம்.
முழுக்க முழுக்க நல்ல நெகட்டிவ் ஷேட் உள்ள ஒரு கேரக்டர் பாலாஜி முருகதாஸுக்கு..But பிரித்து மேய்ந்துள்ளார். எந்தக் காட்சியிலும் அமெச்சூர் நடிப்பு தெரியவில்லை. நாயகிகளில் ரச்சிதா கவர்ச்சியால் அதிர்ச்சி ஏற்படுத்தாமல் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்த முயற்சித்துள்ளார். மற்றைய நாயகிகளான சாந்தினி தமிழரசன், சாக்ஷி, காயத்ரி ஆகியோர் நல்ல நடிப்பின் மூலம் கவனிக்க வைக்கின்றனர்
கதைக்குத் தேவையான இசையை தேவையான இடங்களில் தேவையான அளவில் தந்துள்ளார் இசையமைப்பாளர் டிகே. ஒளிப்பதிவாளர் தனது பணியை செவ்வனே செய்துள்ளார். படத்தின் பட்ஜெட்-ஐ காட்டிக் கொடுக்காத நல்ல ஒளிப்பதிவு
இன்றைய தேவை நம் நாட்டிற்கு மண் சார்ந்த கதைகளும், பெண் சார்ந்த கதைகளும் தான். அந்த வகையில் தனது முதல் படத்திலே பெண் சார்ந்த கதையை முன்னெடுத்துள்ளார் இயக்குநர். ஒரு இயக்குநராக கதை தேர்ந்தெடுத்ததில் ஜெயித்துவிட்டார் ஜே.சதீஷ்குமார். சில காட்சிகளை இன்னும் டெப்த் ஆக அமைத்திருக்கலாம். திரைக்கதையில் ஆங்காங்கே விரவி வரும் ட்விஸ்ட்கள் எல்லாமே பக்காவாக வொர்க் ஆகியுள்ளது
“காதல் என்பது விழி மயக்க வைக்கும் மந்திரம்..அந்த மந்திரத்திலும் விழிப்புணர்வோடு இருப்பவர் மட்டுமே வாழ்விலும் காதலிலும் வெல்ல முடியும்” இப்படியான ஒரு கருத்தை கமர்சியல் கலந்து சொல்லியிருப்பதால் Fire-க்கு Fire-விடலாம்.. லவ்வர்ஸ் டே அன்று வெளியாவதால் ஒரு ஹார்ட்டீனும் சேர்த்து விடலாம்
3/5
-வெண்பா தமிழ்