சிறுவர்களை வைத்து ஒரு அரசியல் விளையாட்டை நடத்த முயற்சித்துள்ளார் இயக்குநர் சங்கர் தயாள்
யோகிபாபுவிற்கு இரு மனைவிகள். இரு மனைவிகளுக்கும் தலா ஒரு மகன் இருக்கின்றனர். இவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் வருகிறது. இருவரும் போட்டியிடுகின்றனர். இருவரில் யார் ஜெயித்தார்கள் என்பதை திரைக்கதை ஆக்கியுள்ளார் இயக்குநர்
யோகிபாபு காமெடிக்கு அதிகம் மெனக்கெட்டுள்ளார். முன்னால் நகைச்சுவை நடிகர் செந்திலோடு அவர் ஜோடிபோடும் காட்சிகள் அட போட வைக்கின்றன. இரு சிறுவர்களும் வயதுக்கு மீறிய நடிப்பை வெளிப்படுத்தாமல், அந்த வயதுக்குரிய நடிப்போடு கவர்கிறார்கள். சில காட்சிகளில் நகைச்சுவை எடுபட்டுள்ளது
‘சாதகப்பறவைகள்’ சங்கர் இசையில் பாடல்கள் பின்னணி இசை நன்றாக வந்துள்ளது . ஒளிப்பதிவாளர் தனது பணியை குறையின்றிச் செய்துள்ளார்
சிறுவர்களை வைத்து தமிழக அரசியலின் போட்டி, எதார்த்தம் ஆகியவற்றை நக்கல் அடித்திருப்பது சிறப்பு. இன்னும் கதை திரைக்கதையில் பவுண்டேஷனை ஸ்ட்ராங் செய்திருந்தால், இந்தக் குழந்தைகள் முன்னேற்றக் கழகம், படக்குழுவினரை மேலும் முன்னேற்றியிருக்கும்
2.75/5
-வெண்பா தமிழ்