Tamil Movie Ads News and Videos Portal

முடக்கறுத்தான்- விமர்சனம்

“சந்தைக்குச் செல்லும் போது பந்திக்காக பாதியிலே போனவனுக்கு பேதில போயிடிச்சாம். லாஸ்டா சந்தைக்கும் போகல..பந்திக்கும் போகல!” எதுக்கு இந்த சொலவட என்றால்..சொல்றேன் சொல்றேன்

கொரோனா காலகட்டத்தில் ஊரையே காப்பாற்ற வந்த கடவுள் என கொண்டாடப்பட்டவர் டாக்டர் வீரபாபு. ஆங்கில மருந்துகளை பொடனியில் அடித்து தமிழ் மருத்துவத்திற்கு கம்பளம் விரித்த டாக்டர் அவர். தற்போது வீரபாபு தன்னிடம் சிகிச்சைப் பெற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு படத்தை வழங்கியுள்ளார் படம் பெயர் முடக்கறுத்தான்.

கதை? ‘அது கெடக்கு விடுங்க’ என்பது போன்ற கதை. நடிப்பு? ‘அது எதுக்கு சினிமாவுக்கு’ என்பது போல ஒரு நடிப்பு. எதுக்கு இந்தப்படம்? அப்படியென்றால், ‘சும்மா தான்’ என்பது போன்ற படம் இது

குழந்தை கடத்தலை அம்பலமாக்கும் ஹீரோ வீரபாபு. நம் நாட்டில் குழந்தைகள் எவ்வளவு அதிகமாக கடத்தப்படுகிறார்கள் என்கிற புள்ளிவிபரங்களை மாஸாக அடுக்குகிறார். ஹீரோயின் கேரக்டரும் நடிப்பும் என்னவென்று தெரியும் முன்பே அவர் காணாமல் போனவர் லிஸ்டில் வந்துவிடுகிறார். சமுத்திரக்கனி ஆறுதல் அளிக்கிறார். சூப்பர் சூப்பராயன் இந்த வயதிலும் அசரடித்துள்ளார் .

இசைஞர் ஒளிப்பதிவாளர் இருவரின் கைகளையும் கட்டிப்போட்டு விட்டார்கள் போல. படத்தில் இருவரும் வேலை செய்தது போலவே தெர்ல அதான்

தேவையான கதையை கையில் எடுத்த டாக்டர் திராபையான திரைக்கதையால் நம் பொறுமையைச் சோதித்து விடுகிறார்.

சூப்பர் ஸ்டார்ட ஒரு டாக்டரா பாராட்டு வாங்கிட்டு, ஒரு ஆக்டராகவும் பாராட்டு வாங்கணும், டைரக்டராகவும் பாராட்டு. வாங்கணும்னு வீரபாபு நினைச்சிருப்பார் போல..ஆனா ..

ம்ம் இப்ப முதல் பத்தில இருக்க சொலவடயப் படிங்க..

முடக்கறுத்தான்/ கழுத்தறுத்தான்
1.5/5
-மு.ஜெகன் கவிராஜ்